Aran Sei

‘வீட்டு பராமரிப்பிலுள்ள கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்தை எடுக்கக்கொள்ளக்கூடாது’ – எய்ம்ஸ் மருத்துவர்கள்

வீட்டு பராமரிப்பில் உள்ள கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்றும் ஆக்சிஜன் அளவு 94-ஐ விடக் குறைந்துவிட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று (மே 15), ‘வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவமும் பராமரிப்பும்’ என்ற தலைப்பில், இணையவழியில் நடந்த கருத்தரங்கில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உரையாற்றியுள்ளனர்.

அப்போது, டாக்டர் நீரஜ் நிஷ்சால் பேசுகையில், “ரெம்டெசிவிர் மருந்தை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எடுக்கக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் எண்ணங்களும் (பாஸ்ட்டிவிட்டி) முறையான உடற்பயிற்சியும் அவசியம். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு மிகவும் லேசான அறிகுறிகளே உள்ளது. முதல் தொற்று சோதனையில் தொற்று இல்லை என்று வந்தால் மீண்டும் ஆர்டி-பிசிஆர் தொற்று சோதனையை செய்துக்கொள்ளவும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

“வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கெண்டு மார்தட்டிக்கொள்கிறது” – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மேலும், ஒருவரை மருத்துவமனையில் அனுமதிப்பதை நோயின் தீவிரத்தை பொருத்து தீர்மானிக்க வேண்டும் என்று டாக்டர் நீரஜ் நிஷ்சால் கூறியுள்ளார்.

டாக்டர் மனீஷ் பேசுகையில், “நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு 94-ஐ விடக் குறைவாக இருந்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். மேலும் ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்க்கும்போது, ​​அந்த நோயாளியின் வயது மற்றும் மற்ற நாள்பட்ட நோய்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்