Aran Sei

உலகநாடுகள் அனுப்பிய 40 லட்சம் பொருட்கள் 31 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன – மத்திய சுகாதாரத்துறை

கொரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உதவ வெளிநாடுகளிலிருந்து வந்த 40 லட்சம் எண்ணிக்கையிலான பொருட்களை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  உள்ள 38 மருத்துவ நிறுவனங்களுக்கு அனுப்பி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை,   “கொரோனா அதிகரித்து வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. உலக நாடுகள் வழங்கியுள்ள இந்த மருத்துவ உதவிக்கான பொருட்கள் தேவைக்கேற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்துவந்துள்ள இந்த உதவிகள் , டெல்லியில் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய 9 மருத்துவமனைகளுக்கும், நாடுமுழுதும் உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ளவை மத்திய, மாநில அரசின் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 146 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா – மத்திய சுகாதாரத்துறை செயலர்

வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள இந்த உபகரணங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கும் பணியில் இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் எச்.எல்.எல் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளை பெற கூடுதல் செயலர் (சுகாதாரத்துறை ) தலைமையில் குழு அமைக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்