Aran Sei

‘தமிழ்மொழி எதிர்ப்பில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் அதிமுக ‘ – கனிமொழி குற்றச்சாட்டு

Image Credits: Scroll

மிழ் மொழி, அடையாளம் மற்றும் பெருமை ஆகியவற்றின் நலன்களுக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. அதனைக் கேள்வி கேட்கத் தைரியம் இல்லாத அதிமுக அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இன்று, அருப்புக்கோட்டை அருகே பழவநாதத்தில் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் உரையாற்றிய கனிமொழி, “கடன் பெறுவதற்காக வங்கிகளுக்குச் செல்வோர் தமிழ் பேச முடியாத அதிகாரிகளை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கு இந்தி மொழி மட்டுமே பேசத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

“ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் இந்த நிலைதான் உள்ளது. இது ஒரு விமான நிலையத்தில் எனக்கும்  நடந்தது. எனக்கு இந்தி தெரியாது என்று கூறி,  ஆங்கிலத்தில் பேசும்படி நான் கேட்டபோது, நீ  இந்தியனா என்று கேட்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நடந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, மத்திய அரசிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்கான தைரியம் மாநில அரசிடம் இல்லை என்று கூறி அவர் விமர்சித்துள்ளார். “அத்தகைய அரசை நாம் மூட்டைகட்டி அனுப்ப வேண்டும்” என கனிமொழி கூறியுள்ளார்.

தொடரும் போராட்டம் – விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கும் திமுக

விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்தது என்று தெரிவித்த அவர். “தற்போதைய அரசுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள போதிலும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆசையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அதிமுக முடிவு செய்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு துரோகம் செய்த அதிமுக – ஸ்டாலின் கண்டனம்

மாணவர்களுக்கு உதவித்தொகை மறுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். “இந்த அரசு விவசாயிகள், பெண்கள் மற்றும் படித்த இளைஞர்களை வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதன் மூலம் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது” என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்