Aran Sei

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தி – 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்திர பிரதேச அரசு

த்திர பிரதேசம் மாநிலம் சகாரன்பூருக்கு காங்கிரஸ் கட்சயின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருவதையொட்டி, அந்தப் பகுதியில் கூட்டங்கள் கூடத் தடை விதிக்கப்பட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, போராடி வரும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் ஆதரவின் ஒரு பகுதியாக, கிசான் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளவிருந்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, “விவசாயிகளின் போராட்டம் தொடர்பான எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், நான் இன்று சகாரன்பூர் வருகிறேன். மூன்று விவசாய சட்டங்களையும் பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக, மாவட்ட நீதிபதி அகிலேஷ் சிங், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மேற்கொள்ளப்படும் ”வழக்கமான நடைமுறை” எனக் கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராசர் பெயர்கள்: ’தொடர்ந்து தமிழர்களின் உணர்வினைப் புண்படுத்தும் பாஜக’ – கி.வீரமணி கண்டனம்

”சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நடைமுறையாக, 144 தடை உத்தரவு பிறப்பிப்பது இருந்து வருகிறது. இந்த நடைமுறை சில காலமாகவே இருந்து வருகிறது” என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அகிலேஷ் சிங் கூறியுள்ளார்.

”மகாபஞ்சாயத்துகளை நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம். அதில் ஏதேனும் விதிகள் மீறப்பட்டால், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என அகிலேஷ் கூறியததோடு, எதிர்வரும் திருவிழாக்கள், கொரோனா பெருந்தொற்று, சட்டம் ஒழுங்கு, சமூக விரோத சக்திகளால் வன்முறை ஏற்படும் வாய்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு என ஏஎன்ஐ -யிடம் அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பெருமை மிக்க ‘அந்தோலன் ஜீவி’ – பிரதமரின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

பிப்ரவரி 13 ஆம் தேதி, முசாபர்நகர் மற்றும் பிஜ்னோர் ஆகிய மாவட்டத்தில், விவசாயிகளுடன் கலந்துரையாடலில் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், விவசாயிகள் மேற்கொண்ட சக்கா ஜாம் (சாலை மறியல்) போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளித்ததற்கு, விவசாயிகளை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டி, பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்