Aran Sei

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஒன்றிய அரசு – நிகழப்போவது என்ன?

credits : the telegraph

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, நவம்பர் 28 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி, டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடையவுள்ளது.

இதையொட்டி, மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

இக்கூட்டத்திற்கு பிரதமர் மோடியைத் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் என்பதால், இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மசோதா குறித்து இரு அவைகளிலும் கடும் விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தொடரில் விவசாய சட்டங்கள் விவகாரம் மட்டுமின்றி, பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் எதிர்க்கட்சிகளும் எழுப்ப வாய்ப்புள்ளது.

அத்தோடு, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகளை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் எழுப்ப எதிர்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்