Aran Sei

‘கோவாவில் பாஜகதான் உண்மையான மாட்டிறைச்சிக்கு ஆதரவான கட்சி’ – சிவசேனா விமர்சனம்

2022 ஆண்டு பிப்ரவரி மாதம் கோவா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

‘இந்துத்துவா’ ஒரு சித்தாந்ததமாக கொண்ட பாஜக, அதைத் தூக்கியெறிந்து வருவதாக சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது.

பாஜக தான் கோவாவின் உண்மையான மாட்டிறைச்சி கட்சி என விமர்சித்துள்ள சிவசேனா. அதன் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “போர்ச்சுகீயர்கள் 450 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க ’பிரித்தாளும்’ அரசியலை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது” என கூறியுள்ளது.

’அக்டோபர் 2க்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைவேன்’ – ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்

”கோவாவில் சூதாட்ட விடுதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மறைந்த மனோஜ் பாரிக்கரால் பாஜக வளர்க்கப்பட்ட நிலையில், தற்போது சூதாட்ட விடுதிகளின் உரிமையாளர்களின் அடிமையாக மாறிவிட்டது. கிராமப்புறங்களில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூதாட்ட மோசடி குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில், சூதாட்ட விடுதிகள் அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட தேவையான தொகை அளித்து அவர்களின் பையை நிரப்பி வருகின்றன” என சாம்னாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா அரசின் தும்ச்சியா துவாரி (உங்கள் வீட்டு வாசலில் உள்ள அரசு) திட்டத்தைக் கேலி செய்துள்ள சாம்னா, “கோவாவில் ’இந்துத்துவா’ வெறும் முகமூடியாக மட்டுமே உள்ளது. பசுவதை தடைச் சட்டம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் என்றால், கோவாவில் எவ்வாறு மாட்டிறைச்சி கிடைக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளது.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

”கோவாவில் பாஜக தான் உண்மையான மாட்டிறைச்சி கட்சியாக உள்ளது. பாஜகவை இந்து சமூகத்தின் இரட்சகர் என கோவா மக்கள் நினைப்பார்களேயானால், அது அவர்களின் தவறு. அது அவர்களுக்கு ஒரு முகமூடி மட்டுமே என்பது தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துத் தெளிவாகிறது” என சாம்னா அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்