Aran Sei

போராட்டத்தை அடக்க இணையதள சேவையை முடக்கிய ஹரியானா அரசு – தலைமைச்செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்

ஹரியானா விவசாயிகளின் மகா பஞ்சாயத்து அறிவிப்பை அடுத்து ஹரியானா மாநில அரசு கர்னல் மாவட்டத்தில் இணையதள சேவைகளை முடக்கியுள்ளது.

மேலும்,  கடந்த ஆகஸ்ட் 28  அன்று விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டிக்கும் விதமாக முன்வைத்த கோரிக்கைகள்  நிறைவேற்றப்படாவிட்டால்   அம்மாநில தலைமைச்செயலகத்தை செப்டம்பர் 7 அன்று முற்றுகையிட உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கர்னல் மாவட்டத்தில் ஹரியானா மாநில அரசு  செயல்படுத்திய  இந்த முடக்கம் செப்டம்பர் 6 மதியம் 12:30 மணிமுதல் இன்று செப்டம்பர் 7  அதிகாலை வரை தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், “கர்னல் பகுதியில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க தொலைபேசி அழைப்பைத் தவிர  இணைய வசதி, எஸ்.எம்.எஸ் சேவைகள் ஆகியவை முடக்கப்படுகிறது” என்று கூறியிருந்தது.

மேலும், வாட்ஸ் ஆப்,முகநூல், ட்விட்டர் போன்ற  சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது.

கடந்த  செப்டம்பர் 6 அன்று 5 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கூடவும் கர்னல் மாவட்டத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவும் பிறப்பித்திருந்தது.

நேற்றைய தினம் இதுகுறித்து தெரிவித்த ஹரியானா விவசாயிகள் சங்கத் தலைவர் குர்ணம் சிங் சதுனி, நாளைய தினம்[செப்டம்பர் 7] கர்னல் பகுதியில் மகாபஞ்சாயத்து நடைபெறும் என்றும் அதன் தொடர்ச்சியாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்