Aran Sei

ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்

க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில், இலங்கை அதிபர் கேத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மோடியிடம் சனிக்கிழமை (மார்ச் 13) ஆம் தேதி பேசியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மாண்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டு மார்ச் 12 ஆம் தேதி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மார்ச் 22-23 தேதிகளில் நடத்தப்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது, அதிகார பகிர்வு தொடர்பான இலங்கை அரசின் உறுதிப்பாட்டை கோரும் வகையிலான திருத்தங்கள் இறுதி வரைவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

“இலங்கை அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாம் திருத்தத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளும் சிறப்பாகச் செயல்பட உறுதி செய்ய வேண்டும்” என்று இலங்கை அரசுக்கு  வரைவுத் தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது என தி வயர் கூறியுள்ளது.

2022 செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இருக்கும் வகையிலும், 2021 செப்டம்பர் மற்றும் 2020 மார்ச் மாதங்களில், இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் தலைவர் அறிக்கை வழங்கும் வகையிலும் வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தகவல்கள் கசிந்தால் விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை – கர்நாடகா உயர்நீதிமன்றம்

இலங்கை அரசு முன்னெடுத்த தொலைபேசி அழைப்பில், ஐநா மனித உரிமை பேரவை வரைவுத் தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, வாக்கெடுப்பை நிராகரிக்க வேண்டும் என இலங்கை அரசால் வலியுறுத்தப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிப்பதாக, தி வயர் கூறியுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்தியாவின் முதல் கொள்கை அண்டை நாடான இலங்கையின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர் கொரோனா சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு அதிகாரிகளிடையே வழக்கமான தொடர்பைப் பராமரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்