கடந்த மாதம் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள், மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று(டிசம்பர் 24), மகாராஷ்ட்ரா மாநில நாக்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள நரேந்திர சிங் தோமர், “விவசாயத் திருத்த சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால், சிலருக்கு இச்சட்டங்கள் பிடிக்கவில்லை. சுதந்திரத்திற்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய சீர்திருத்தம் அது” என்று கூறியுள்ளார்.
“ஒன்றிய அரசு ஏமாறவில்லை. ஒரு படி பின்வாங்கி சென்றிருக்கிறோம். மீண்டும் முன்னோக்கி வருவோம். ஏனெனில், விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.