Aran Sei

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ராஜஸ்தான் ஆளுநர்

தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று திரும்ப்பெற்றார். இது குறித்து பேசிய ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, “விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க ஒன்றிய அரசு முயற்சித்தது. ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களை திரும்பப் பெற்று, தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிறது” என கூறியுள்ளார்.

‘அறிவித்தபடி ட்ராக்டர் பேரணி நடக்கும்’ – விவசாயிகள் சங்கம் உறுதி

“வேளாண் சட்டங்களுக்கும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, பிரதமருக்கு நாடுதான் முக்கியம். மசோதாக்கள் வருகின்றன, அவை ரத்து செய்யப்படுகின்றன, அவை மீண்டும் வரலாம், மீண்டும் வரைவு செய்யப்படலாம்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்று ராஷ்டிரிய லோக் தளத்தின்  தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஏற்கனவே விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதியுதவி – தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி கூறியதாவது, “பிரதமர் மோடியின் வார்த்தைகளில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லாதது விந்தையானது. இன்று, பிரதமரின் வார்த்தைகளுக்கு மதிப்பே இல்லாத நிலையை நாடு எட்டியுள்ளது. இந்த விவசாயச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும்போது மத்திய அரசை நம்புவோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்” என தெரிவித்துள்ளார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்