Aran Sei

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த ஒடிசா தீர்மானம்

விவசாயத் துறையில் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றுமாறு, ஒடிசா மாநில ஆளும் அரசான பிஜு ஜனதா தளம் மத்திய அரசிடம் கோரியுள்ளது.

நேற்று (டிசம்பர் 20), பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில், அக்கட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

அப்போது பேசிய முதலவர் நவீன் பட்நாயக், ” விளைவிக்கும்  பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் போது மட்டுமே விவசாயிகளின் வருமானம் உயரும் என்பதில் எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை ஒடிசா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சினையைப் பீஜு ஜனதா தளம் டெல்லிக்கும் கொண்டு சென்றுள்ளது.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், மாநில நிதி அமைச்சருமான நிரஞ்சன் பூஜாரி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

`சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, விவசாயத்துறைக்குத் தனி பட்ஜெட் அறிவித்த முதல் மாநில அரசு பிஜு ஜனதா தளம் என்றும் புதிய விவசாயக் கொள்கைகளைத் தவிர, விவசாயத் துறை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டமான சம்ருதி திட்டத்தையும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்குத் தங்கள் தார்மீக ஆதரவை கட்சி வழங்குவதாகப் பொது அறிக்கைகள் வெளியிடுவதை தவிர, வெளிப்படையாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், பிஜு ஜனதா தளத்தின் எந்த மூத்த தலைவர்கள் இதுவரை முன்வரவில்லை என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

ஒடிசாவிற்கான சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தும் வகையில், தீர்மானம் ஒன்றையும் அக்கட்சி சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்