Aran Sei

விவசாய சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்பி

த்திய அரசு இயற்றிய விவசாய சட்டங்களை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, பாஜக உடனான கூட்டணியில் இருந்தும் மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்தும் ராஜஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவால் விலகியுள்ளார்.

ஹனுமான் பெனிவால் தனது கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சிக்கு (ஆர்எல்பி) பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தனி மக்களவைத் தொகுதியான நாகூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

விவசாய சட்டங்கள் : ‘பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்’ – ஆர்எல்பி தலைவர்

இவர் தொழிற்சாலைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான நாடாளுமன்றக் குழு மற்றும் மனுக்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.

நேற்று (டிசம்பர் 29) ஹனுமான் பெனிவால் அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், நாடாளுமன்றக் குழு கூட்டங்களில், பல பிரச்சினைகள் குறித்து தான் எழுப்பிய விவாதங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

“நான் நாடாளுமன்ற குழுக்களில் பல மக்கள் பிரச்சினைகளை எழுப்பினேன். ஆனால் அந்த பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு, நாடாளுமன்ற அமைப்பில் குழுக்கள் என்ற ஒன்று இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “நான் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்படாமல் இருப்பதாலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நான் இந்த குழுக்களிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று ஹனுமான் பெனிவால் தனது ராஜினாமாவிற்கான காரணங்களை கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

 

மேலும், வரும் டிசம்பர் 26 ஆம் தேதி, டெல்லியை நோக்கி ஒரு விவசாயிகள் பேரணியை நடத்தவுள்ளதாக  அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்