மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை வரவேற்றுள்ள ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தச் சட்டங்களின் நன்மைகள் குறித்து சில விவசாயிகள் சங்கங்களுக்கு விளக்கிக் கூறி ஏற்றுக்கொள்ள வைப்பதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று(நவ்மபர் 19), செய்தியாளர்களை சந்தித்துள்ள நரேந்திர சிங் தோமர், “மூன்று புதிய விவசாய சட்டங்களின் வழியாக விவசாய சமூகம் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றி, விவசாயிகளுக்குப் பலன் அளிக்கவே இந்த அரசு விரும்பியது. விவசாயிகளின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவதே பிரதமரின் நோக்கம். இந்தச் சட்டங்களின் பலன்கள் குறித்து சில விவசாயிகளிடம் விளக்கி சொல்லி ஏற்க வைப்பதில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
உத்தராகாண்ட் தேர்தல் – பாஜகவை தோற்கடிக்க களமிரங்கும் பூசாரிகள்
கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாயத்துறையிலும் விவசாயிகள் நலனுக்கும் ஒன்றிய அரசின் அர்ப்பணிப்பு குறித்தும் 2014 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
“சிறு விவசாயிகளை ஆதரிப்பதற்காக, ஒன்றிய அரசு பிஎம்-கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வழியாக, விவசாயிகளுக்கு 1.62 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பயிர்க்கடன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது” என்று நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.