Aran Sei

விவசாயிகள் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்  விஜேந்தர் சிங், மத்திய அரசு அளித்த கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார் என்று அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடியவர்கள் மீது தாக்குதல் – சிபிஎம் கண்டனம்

மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே, இச்சட்டங்களை எதிர்த்து அவர்கள் டெல்லியில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

விவசாய சங்கங்கள், வருகிற 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்குப் பல  காட்சிகள் அமைப்புகள்  ஆதரவு அள்ளித்தந்துள்ளன. மத்திய அரசோடு விவசாய பிரதிநிதிகள் பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டு, பின்னர் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாத நிலையில் தங்களின் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆதரவு

வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவர் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், உலக சாம்பியன்ஷிப், காமென்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்