2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயை கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 30 ஆம் தேதி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஜூலை 29 ஆம் தேதி, நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி ஹத்ராஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸில் உள்ள சதாபாத் நகரைச் சேர்ந்த சந்தீப் பதக் அளித்துள்ள புகாரில், “ஆங்கிலத்தில் டோம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் வெளியான புத்தகத்தை ரெத் சமாதி என்ற பெயரில் இந்தியில் மொழி பெயர்த்ததற்காக புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சிவன் மற்றும் பார்வதி குறித்த ஆட்சேபனைக்குரிய சித்தரிப்புகளை கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கீதாஞ்சலி ஸ்ரீயின் எழுத்துக்கள் மிகவும் ஆபாசமான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும், புத்தகத்தின் ’ஆட்சேபனைக்குரிய’ பத்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளதாகவும் பதக் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பதிவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் கணக்குகளை டேக் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்காக அதன் ஏற்பாட்டாளர்களான ரங்கலீலா சமூக மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் அனில் சுக்லா மற்றும் ஆக்ரா தியேட்டர் கிளப்பின் ஹர்விஜய் பாஹியா வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கீதாஞ்சலி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், அவரது தந்தை ஆக்ரா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம், மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லுடன் இணைந்து, ரெட் சமாதியின் மொழிபெயர்ப்புக்காக கீதாஞ்சலி ஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இந்தி மற்றும் இந்திய மொழி இலக்கியத்திற்கான முதல் விருதைக் குறிக்கிறது. இந்த புத்தகம் பிரிவினையில் இருந்து தப்பியவராக பாகிஸ்தானுக்கு வருகை தரும் 80 வயது மூதாட்டியின் கதையைப் பற்றியது, மேலும் இந்த செயல்பாட்டில் அடையாளம், உணர்ச்சி அதிர்ச்சி, வாழ்க்கை மற்றும் மரணம் மற்றும் சமூகத்தில் ஒரு பெண்ணாக திணிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள்பற்றிய கேள்விகளையும் வழிநடத்துகிறது.
இதுவரை கீதாஞ்சலி ஸ்ரீ ஐந்து நாவல்களையும் ஐந்து சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
Source: The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.