Aran Sei

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

க்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களையும், போலி தேசியவாதிகளையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் நாட்டின் இளைஞர்களையும், நமது ராணுவத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். இதுவரை தேச பக்தர்களாகவும், தேசியவாதிகளாகவும் வேடம் போட்டு வந்தவர்களின் முகமூடி இன்று கிழிந்துவிட்டது. போலி தேச பக்தர்களையும், தேசியவாதிகளையும் இனியாவது இளைஞர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “உங்களை (இளைஞர்கள்) விட சிறந்த தேச பக்தர்கள் யாரும் கிடையாது. இந்தப் போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், இந்த நாடும் உறுதுணையாக இருக்கிறது. எனவே நீங்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராட்டம் நடத்துங்கள். நாட்டையே சீரழிக்கும் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிவதே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையான தேச பக்தியை காட்டுகிற, நாட்டின் இளைஞர்களை முன்னேற்றும் அரசாங்கத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்