Aran Sei

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

Credit: NDTV

ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ராணுவத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

உ.பி. அக்னிபத் விவகாரம்: பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடமிருந்து இழபீட்டை வசூலிக்க மாநில அரசு திட்டம்

ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்பு பஞ்சாய்த்துகள் மற்றும் பிற சமூக குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டம் ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தன்கர் காப் தலைவர் ஓம் பிரகாஷ் தன்கர், “இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களை சமூகரீதியில் தனிமைப்படுத்த முயற்சிப்போம். அக்னிவீரன் என்ற பெயரில் இளைஞர்களை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தும் ர்த்தும திட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். அவர்களை புறக்கணிக்கிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து விலகி நிற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம்  ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஜூன் 14 தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்களை புறக்கணிக்க தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், “அந்த நிறுவனங்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். என்று கோரியுள்ள தன்கர், “சாம்ப்லாவின் சோட்டு ராம் பகுதியில் நிரந்தர எதிர்ப்பு’ இருக்கும் அதில் அந்த பகுதி மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source: NDTV

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்