Aran Sei

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள்  இன்றும் நாளையும்  நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில் நாடு தழுவிய அளவில் 9 ஊழியர் சங்கங்கள் இணைந்துள்ளன.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

‘மீண்டும் தனியார்மயமாக்கல்’ – நிதி ஆயோக் ஆலோசனை

மேலும் , மார்ச் 13 அன்று இரண்டாம் சனிக்கிழமை , மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமை , தற்போது மார்ச் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி நடவடிக்கை முடங்கியுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பின்போது இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை குறித்து பேசி இருந்தார்.

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

இந்நிலையில் அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக வருகின்ற மார்ச் 17 அன்று பொதுத்துறை காப்பிட்டு நிறுவனங்களும் ,மார்ச் 18 அன்று எல்.ஐ.சி நிறுவனமும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

SOURCE; NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்