காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (ஏ.ஜி) கே.கே.வேணுகோபால் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார்.
இந்திய நீதித்துறைக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது, அதன் கண்ணியத்தை அவமதித்ததால் அவர்மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஏ.ஜி.க்கு கடிதம் எழுதியிருந்தார்.
“இந்த நாட்டில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது, அதில் ஒருவர் தனது கருத்தைக் கூறுவதற்கு 100% சுதந்திரம் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி இந்த நிறுவனங்களில் தங்களுக்கு ஆதரவான நபர்களைச் சேர்க்கிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இது மிகவும் வெளிப்படையானது! அவர்கள் இந்த நாட்டின் நிறுவன கட்டமைப்பை கைப்பற்றிக் கொள்கிறார்கள்” என ராகுல் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை வினீத் ஜிண்டால் அந்தக் கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வகுக்க காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
ராகுல் காந்தியின் அறிக்கை நீதித்துறையைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுகிறது என்றும், அது இந்திய உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றும் கூறிய ஏ.ஜி, ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர அனுமதி மறுத்துவிட்டார்.
“நான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை . எதுவாக இருந்தாலும், ராகுல் காந்தியின் கருத்து பொது மக்களின் பார்வையில் நிறுவனத்தின் (நீதித்துறை) மாண்பைக் குறைத்து விட்டது என்று கூறமுடியாத அளவுக்குத் தெளிவற்றதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன், “என்று ஏஜி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
Source : Bar and Bench
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.