Aran Sei

டெல்லியில் இருந்து ஜார்கண்டிற்கு 7 மாதம் நடந்தே பயணித்த தொழிலாளர் – ஊரடங்கும் வேலையிழப்புமே காரணம்

ஜார்கண்டை சேர்ந்த 54 வயதான பெர்ஜோம் பம்தா பஹடியா, டெல்லியில் இருந்து நடைபயணமாக ஜார்கண்ட் சென்றதாகவும், 7 மாதங்களுக்குப் பிறகு அவர் வீடு திரும்பியதில் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்பந்தக்காரரால் ஏமாற்றப்பட்டு, கூலி மறுக்கப்பட்டு, இருப்பிடத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பெர்ஜோம் பம்தா பஹடியா, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் இருந்து நடைபயணமாக ஜார்கண்டிற்கு புறப்பட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டம் அமர்பிதா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மார்ச் 13 ஆம் தேதி திரும்பிய பெர்ஜோம் பம்தா பஹடியா, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது. அதன் காரணமாக, பல நகரங்களில் வசித்த புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாகச் சொந்த ஊருக்குப் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று தன் நினைவுகளை அவர் பகிர்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

நல்ல சம்பளம் கிடைக்கும் என இடைத்தரகர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில், தனது கிராமத்தைச் சேர்ந்த 10 பேருடன் டெல்லிக்கு சென்றதாகப் பஹடியா கூறியதாக டெலிகிராப் செய்தி கூறியுள்ளது..

”ஊரடங்கிற்கு முன்பும் 20 முதல் 25 நாட்கள் நான் பணி புரிந்தேன், இடைத்தரகர் எனக்குக் கூலி வழங்கவில்லை. இரு வேளை உணவும், தங்குவதற்கு இடமும் மட்டுமே அளித்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு நான் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த 7 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆதார் அட்டையைப் பறித்துக் கொண்டு என்னை அங்கிருந்து விரட்டினார்” என பஹடியா கூறியதாக டெலிகிராப் தெரிவித்துள்ளது.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சாந்தலி மொழி மட்டுமே பேசத் தெரிந்த பஹடியா 2020 ஆகஸ்ட் மாதம்வரை நடைபாதையில் தங்கியிருந்த நிலையில், ரயில் டிக்கெட் கூட எடுக்கப்ப பணம் இல்லாததால் நடைபயணமாகச் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை வழியாக நடந்து வந்த பஹடியா, தனது பயணம் முழுவதும் பிச்சை எடுத்துப் பிழைத்ததாகவும், இடையில் ஒரு பதினைந்து நாட்கள் பசியுடன் இருந்ததாகவும் டெலிகிராப் –யிடம் தெரிவித்துள்ளார்.

”கடந்த மார்ச் 11ம் தேதி, ரொட்டி வங்கி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர், தன்பாத் மாவட்டம் மஹுடா பகுதியில் உள்ள முச்சரிதிஹ் ரயில் கிராசிங்கில் நான் பசியாக இருப்பதைக் கண்டார். இதுகுறித்து அவரது சக  உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து  சாஹெப்கஞ்ச் வரை செல்ல ரயில் அல்லது பஸ் டிக்கெட் வாங்க பணம் திரட்ட முடிவு செய்ததோடு, புதிய ஆடைகள், உணவு வழங்கி, ஓய்வெடுக்க ஒரு அறை ஏற்பாடும் செய்தனர்” என பஹடியா கூறியதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

கிரிப்டோ நாணயங்கள் தடை செய்யப்படுமா? – பிட்காயின் விலை ரூ 44 லட்சத்தை எட்டிய நிலையில் விவாதம்

“எங்கள் உறுப்பினர்கள் சிலர் அவரது புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் அவரது அனுமதியுடன் பதிவேற்றிருந்தனர். சாஹேப்கஞ்ச் செல்ல இருந்த ஒரு ஒப்பந்தக்காரர் எங்களைத் தொடர்பு கொண்டு பஹடியாவை  கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முன்வந்தார்” என்று  ரொட்டி வங்கி உறுப்பினர் சூரஜ் குமார் டெலிகிராப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ரொட்டி வங்கி உறுப்பினருடன் ஒப்பந்தக்காரரின் வாகனத்தில் மஹதாவிற்கு மார்ச் 12 ஆம் தேதி அழைத்துச் செய்யப்பட்ட பஹடியா, அங்கிருந்து மார்ச் 13 ஆம் தேதி காலைத் தனது கிராமத்திற்கு சென்றதாக டெலிகிராப் கூறியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மம்தா – சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம்.

சாஹேப்கஞ்ச் துணை ஆணையர்  ராம் நிவாஸ் யாதவ், ”நான் விசாரணை குழு ஒன்றை டெல்லிக்கு அனுப்புவேன், முடிந்தால் இடைத்தரகரை கைது செய்வேன். இடைத்தரகர்களால் தவறான வாக்குறதிகள் மூலம் தொழிலாளிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க அரசு உதவிகளை வழங்கும்” என உறுதியளித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வெளியான செய்திகளின்படி, நாடு முழுவதும் ஜார்கண்டை சேர்ந்த 6.54 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி தவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்