Aran Sei

முதல் டோஸ் செலுத்திய பின்னும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா உறுதி – பாதுகாப்பானதா தடுப்பூசி?

Image credit : thewire.in

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது.

ஓராண்டு காலமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிலநாட்களாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் தொடங்கியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

இந்தியாவில் தினமும் 1,00,000 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் அதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாகச் செலுத்தப்பட்ட நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி – மருந்தியல் வல்லுனரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில்,‘‘கொரோனா அறிகுறியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. 70 வயதாகும் மோகன் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source: hindustan times

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்