டெல்லி உத்திரபிரதேச எல்லையான காசிப்பூர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் போராடி வந்த போராட்டக் களத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மற்றும் கம்பிகளை டெல்லி காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு போராட்டக் களத்தைச் சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.
காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) பிரியங்கா காஷ்யப், “தேசிய நெஞ்சாலை எண் 9ல் தடுப்புகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை 24 ஏற்கனவே போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
காசியாபாத், டெல்லி, நொய்டா மற்றும் மீரட் உள்ளிட்ட உத்திரபிரதேசத்தின் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சாலை திறப்பு பயனளிக்கும்.
ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் நவம்பர் 26, 2020 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்று தெரிவித்த உச்சநீதிமன்றம். சாலைகளை காலவரையின்றி மறிக்க முடியாது என அக்டோபர் 21 ஆம் தேதி கூறியிருந்தது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.