Aran Sei

புனேவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி – 19 பேரை கைது செய்த காவல்துறை

புனேவில் 14 வயது சிறுமி ஆட்டோ ரிக்சா ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் 527  ஆட்டோ ரிக்சாக்கள்  முறையான ஆவணங்களின்றி இயக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர், இந்த நடவடிக்கை  புனே ரயில் நிலைய பகுதி, ஸ்வர்கேட், சிவாஜிநகர் மற்றும் பானர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சிறுமியின் பாலியல் வன்கொடுமைத் தொடர்பாக  இதுவரை 19 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலனோர் முறையான ஆவணங்களின்றி ஆட்டோ ரிக்சா ஒட்டியவர்களாகும்.

மேலும், கடந்த 10 நாட்களாக நடந்த ஆய்வில் 41 ஆட்டோ ரிக்சாகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 486 ஆட்டோ ரிக்சாகள் மீது அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மகாரஷ்டிரா மாநில ரிக்க்ஷா பஞ்சாயத்தின் தலைவர் பாபா காம்ப்லே, “காவல்துறை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சட்டவிரோத செயல்களால்  ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்களுக்கு களங்கம் ஏற்படுகிறது”  என்றும் தெரிவித்துள்ளார்.

Source:THE INDIAN EXPRESS

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்