Aran Sei

கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, கட்சியை வலுப்படுத்த தயாராகும் காங்கிரஸ் – குலாம் நபி ஆசாத்தை சந்தித்த சோனியா காந்தி

ண்மையில், குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த நிலையில், இன்று (மார்ச் 22) தனது இல்லத்தில் ஜி-23 குழுவைச் சேர்ந்த சில தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

2020ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 தலைவர்களைக் கொண்ட ஜி-23 குழுவானது சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சித் தலைவர் தேர்தல், கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல், காங்கிரஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உள்ளிட்ட கட்சியின் அமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்தனர். குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்குழுவில் உள்ளனர்.

இந்த ஜி-23 குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர்.

காங்கிரஸில் உள்ள மூன்று ‘காந்திகளும்’ அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது நாட்டுக்கு நல்லது – ராமச்சந்திர குஹா விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சியானது, கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் தோல்வியைச் சந்தித்தது.

இத்தோல்விகள் குறித்து ஜி-23 தலைவர்களிடையே மீண்டும் அதிர்ப்தி உருவானது.

அதைத் தொடர்ந்து, மார்ச் 18 அன்று, சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ள குலாம் நபி ஆசாத், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சோனியா காந்தி தலைவராகத் தொடர வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.  கட்சித் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருந்தார்.

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

இந்நிலையில், இன்று (மார்ச் 22), காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி ஆகியோர் சோனியா காந்தியைச் சந்தித்துள்ளனர். வரும் நாட்களிலும் ஜி-23 தலைவர்களை சோனியா காந்தி சந்திக்க உள்ளார்.

ஜி-23 இன் ஆலோசனைகளை பெற்று, கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, கட்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு தீர்கமான முயற்சிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Source: PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்