Aran Sei

18 வயதிற்குமேல் மே 1 முதல் தடுப்பூசி: இரண்டு வாரத்தில் பெருந்தொற்று ஏற்படாதெபதற்கு என்ன உத்தரவாதம் – ரவிக்குமார் கேள்வி

கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வரும் சூழலில் வரும் மே 1-ம் அன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த பலகட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.

‘ஒரே நாளில் 25 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுகள்; குறையும் இறப்பு விகிதம்’ – அமைச்சகம் தகவல்

இந்தக் குழுக்கூட்டத்தில் தடுப்பூசியின் விலை,கொள்முதல் , தகுதி மற்றும் எளிதாக கிடைப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, 3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்தில் வரும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் 10113 நிறுவனங்கள் – கொரோனா தொற்று எதிரொலி

மேலும், கொரோனா தடுப்பூசி பொது சந்தையில் முன்னறிவிக்கப்பட்ட விலையையோடு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் , “கொரோனா பரவலில் அடுத்த 2 வாரங்கள் முக்கியமானவை என நிபுணர்கள் கூறிவரும் நிலையில் மே 1 ஆம் தேதி என நிர்ணயிப்பது எந்த அளவுக்கு சரி” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

SOURCE; PIB

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்