Aran Sei

ரோகிங்கியா அகதிகள் – ஜம்மு கைதுகளை எதிர்த்து டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

ரோகிங்கியாக்கள் கைது செய்யப்படுவதையும், நாடு கடத்தப்படுவதையும் தடுக்கக் கோரி ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்ததற்காக 71 ரோகிங்கியாக்களை, மார்ச் 11-ம் தேதி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட மத ரீதியான துன்புறத்தல் காரணமாக ரோகிங்கியா இஸ்லாமியர்கள் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் அகதிகளாகக் குடிபெயர்ந்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டிற்கே நாடு கடத்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் 6-ம் தேதி ஜம்முவில், ’சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்’களாகக் கருதப்படும் ரோகிங்கியாக்களில் 200 பேரைக் கைது செய்த ஜம்மு காவல்துறை, அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாகச் சிறையில் அடைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் வசிக்கும் 71 ரோகிங்கியாக்கள், தலைநகர் டெல்லியில் இருக்கும் ஐநா அகதிகள் உயர் ஆணையர் அலுவலகம் முன்பு மார்ச் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட ரோகிங்கியாக்கள் பற்றிய விவரங்கள் மியான்மர் அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  மூலம் வழங்கப்பட்டு அடையாளம் சரிபார்க்கப்பட்டவுடன் நாடு கடத்தப்படுவர் என ரோகிங்கியாக்கள் கைது செய்து அடைக்கப்பட்டிருக்கும் சிறை அதிகாரியான ஜம்முவின் காவல்துறை தலைவர் முகேஷ் சிங் தெரிவித்திருந்தார்.

ரோகிங்கியாக்கள் போராட்டம் தொடர்பாக ஐ.நா அகதிகள் உயர் ஆணையர் அலுவலக அதிகாரி, ”ரோகிங்கியாக்கள் கைது தொடர்பான ஊடகங்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த விசயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்