Aran Sei

கேரளா உயர்நீதிமன்ற அழுத்தம் – மாநிலங்களவை தேர்தலை ஏப்ரல் 30 ஆம் தேதி நடத்தும் தேர்தல் ஆணையம்

கேரளாவில் காலியாகவிருக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் அழுத்தம் கொடுத்ததையடுத்து, ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்தல்  நடத்தப்படும் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் தேதி காலியாகவிருக்கும் இடங்களுக்கான தேர்தலை, ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடாததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஷர்மா கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தேர்தலைத் தள்ளிவைத்தது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 2 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும் தேர்தல் எப்போது நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் ஆகிய தகவல்கள்குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்துள்ளது ஏன்? – தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், மாநிலங்களவை இடங்களின் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 20 தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 23 என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 30 தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்