மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஒரே நாளில் 3000 இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு 24 விழுக்காடு உதவித்தொகை வேண்டும். மருத்துவர்களுக்குத் தனியாக ஒதுக்கப்பட்ட மருத்துவ படுக்கைகள் வேண்டும். மருத்துவர்களின் குடும்பங்களுக்குச் சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்
இது தொடர்பாக தொடரப்பட்டிருந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு, மருத்துவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று தெரிவித்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைவரும் அடுத்த 24 மணிநேரத்தில் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகம் 450 இளநிலை மருத்துவர்களின் பதிவை ரத்து செய்தது. இது மற்ற 6 மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களை ராஜினாமா செய்யத் தூண்டியது.
மத்தியபிரதேச இளநிலை மருத்துவர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் மீனா, “மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இருப்பினும் வேலை நிறுத்தம் நடைபெற்ற நான்கு நாட்களில் எந்த எழுத்துப்பூர்வ உத்திரவாதமும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
”மாறாக நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் எங்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம். அரசாங்கத்தால் மருத்துவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதை தடுக்க முடியும், ஆனால் ராஜினாமா செய்வதை தடுக்க முடியாது. எனவே, நாங்கள் ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் படி, மருத்துவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட முடியாது என்பதை சுட்டிக்காட்டி ஜபல்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சைலேந்திர பாபு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, “கொரோனா தொற்று பரவல் இருக்கும் காலத்தில், மருத்துவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. மருத்துவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாதவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என உத்தரவிட்டிருந்தது.
மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உரிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்கான உத்திரவாதத்தை மட்டுமே மருத்துவர்கள் கோருவதாக கூறிய இளநிலை மருத்துவர் சவுரவ் திவாரி, ”நாங்கள் சிறந்த பாதுகாப்பை விரும்புகிறோம். பல முறை நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம். மருத்துவர்களோ அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களோ நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கைகள் கூட இல்லை” என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.