Aran Sei

புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை – தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை உயர்வு

தொடர்ந்து இரண்டு நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று  பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்த்தப்பட்டதை அடுத்து, டெல்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமான 102.94 ரூபாயை எட்டியுள்ளது.

டீசல் விலை 35 காசுகள் உயர்ந்தப்பட்டதை அடுத்து, ஒரு லிட்டர் ரூ 91.42க்கு விற்கப்படுகிறது.

லக்கிம்பூர் வன்முறை – விவசாயிகளை மோதிய காரை ஓட்டிச் சென்றது பாஜக அமைச்சரின் மகன் என்பது காணொளியில் அமபலம்

மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் பெட்ரோலின் விலை இன்னும் அதிகமாக உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 29 காசுகளும், டீசல் விலை 27 காசுகளும் உயர்த்தப்பட்டதை அடுத்து பெட்ரோல் ஒரு லிட்டர் 108.96 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர்  99.17 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தா, பெங்களூரூ, சென்னை போன்ற நாட்டின் பிற பகுதிகளிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 82.53 அமெரிக்க டாலரில் இருந்து 78.87 அமெரிக்க டாலராக குறைந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு வந்துள்ளது.

லக்கிம்பூர் கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் – சம்பத்தை படம்பிடித்ததே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சமையல் எரிவாயு விலையும் சிலிண்டர் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு விலை ரூ. 899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்