அகதிகளாகப் பிரகடனப்படுத்த வேண்டும் மற்றும் பொருளாதார உதவிகள் செய்யப்பட வேண்டுமென இந்தியாவில் உள்ள ஆப்கான் நாட்டைச் சார்ந்தவர்கள் டெல்லியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கான் ஒற்றுமை குழு சார்பில் ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் அமைப்பிற்கு அளித்துள்ளக் கடிதத்தில், “ஆப்கானில் நிலைமை மிகமோசமடைந்துள்ளதால், முகாம்களில் இருக்கக்கோருபவர்களை எவ்வித தடையும் கட்டுப்பாடுகளும் இன்றி அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
மேலும், தற்போதைய சூழலில் ஆப்கானிலிருந்து எந்த நிதி ஆதாரமும் வர இயலாத நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறும் வரை யூ.என்.ஹச்.சி.ஆர் அமைப்பும் அதன் பிற நிறுவனங்களும் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, அனைத்து ஆப்கான் மக்களை அகதிகளாக ஏற்கும் வகையில் யூ.என்.ஹச்.சி.ஆர் அமைப்பு அனைத்து தூதரகத்திற்கும் கடிதம் வழங்க வேண்டும் என்றும், அதன் நகலை ஒவ்வொரு ஆப்கானியர்களுக்கும் தனியே வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, இந்தப் பகுதியில் கூடுவோம் என்றும் ஆப்கான் ஒற்றுமை குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதே போன்று, அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிய அரசும், பல்கலைகழக நிர்வாகமும் தங்களுக்கு உதவ வேண்டுமென கோரியுள்ளனர்.
source: என்டிடிவி
தொடர்புடைய பதிவுகள்:
” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்
ஒன்பது மாதங்களை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையை அடைந்த தமிழ்நாட்டு விவசாயிகள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.