Aran Sei

ஆப்கானிஸ்தான்: பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த தாலிபான் அரசு

பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தி நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு தடை விதித்துள்ளது என இங்கிலாந்தின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொந்தளிப்பான நேரத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இது ஒரு மோசமான வளர்ச்சி என்று பிபிசி தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்களைக் கடுமையாக தாக்கிய தாலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் கேள்விக்குறியாகும் பத்திரிக்கை சுதந்திரம்

“பத்திரிகை சுதந்திரத்தை ஆப்கானிஸ்தான் அரசு மறுக்கக் கூடாது. தாலிபான்களின் இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று பிபிசி உலக சேவை மொழிகளின் தலைவரான தாரிக் கஃபாலா தெரிவித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்