ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவிருந்த வெடிப்பொருட்கள் கொண்ட வாகனத்தின் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றைய தினம் நடந்த அந்தத் தாக்குதலின்போது 3 குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க சென்ட்ரல் கம்மாண்ட், காபூல் விமான நிலையத்தில் நடந்து வரும் வெளியேற்றப் பணிகளின் மீதான ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை [ஆகஸ்ட் 26] அன்று நடந்த தாக்குதலில் ஏறத்தாழ 175 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க மூத்த அதிகாரி, காபூல் விமானநிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகனநிறுத்தும் இடத்தில் நின்ற வாகனத்தில் வெடிப்பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்த போது அங்கு அமெரிக்காவின் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபிறகு, அந்நாட்டில் அமெரிக்கா நடத்தியுள்ள இரண்டவது ஆளில்லா விமானத்தாக்குதல் இதுவாகும்.
source:அல் ஜசிரா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.