Aran Sei

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பயணிக்க கூடாது – தாலிபான்கள் உத்தரவு

ப்கானிஸ்தானில் ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்குத் தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நேற்று (மார்ச் 27) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாலிபான்களோடு ஆர்எஸ்எஸ்சை ஒப்பிட்ட கவிஞர் ஜாவேத் அக்தர் : மன்னிப்பு கேட்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்

ஆப்கானிஸ்தானில் 6 ஆம் வகுப்பிற்கு மேல் பெண்கள் படிக்கக் கூடாது என்று தாலிபான்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் ஆண் துணையில்லாமல் பெண்கள் பயணிக்க கூடாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசின் இந்த முடிவால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தாலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்புகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

போராடியப் பெண்களைத் தாக்கிய தாலிபான்கள் – ஐ.நா. சபை கண்டனம்

இந்நிலையில், மார்ச் 26 அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் விமான பயணச்சீட்டு வைத்திருந்த சில பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் பெண்கள் அவர்களது ஆண் உறவினருடன் தான் செல்ல வேண்டும் என்று தாலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் முன்னரே தெரிவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்த தாலிபான்கள் பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் தடை விதித்தனர். மேலும் அப்போது ஆண் உறவினர் துணையில்லாமல் வீட்டை விட்டு பெண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபான்கள் இஸ்லாமியச் சட்டம் மற்றும் ஆப்கானிய பண்பாட்டின்படி பெண்களின் உரிமைகளை அனுமதிப்பதாகக் கூறியிருந்தனர்.

பத்திரிக்கையாளர்களைக் கடுமையாக தாக்கிய தாலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் கேள்விக்குறியாகும் பத்திரிக்கை சுதந்திரம்

இந்நிலையில், 6 ஆம் வகுப்பிற்கு மேல் பெண்கள் படிக்கக் கூடாது மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் விமானத்தில் பெண்கள் தனியாக பயணிக்கக் கூடாது என்ற தாலிபான்களின் அறிவிப்பை ஆப்கானிய பெண்கள் மற்றும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்