Aran Sei

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் தொடர்பு? – வழக்கறிஞரின் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் போலீஸ் சோதனை

credits : the quint

டகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக வாதாடி வரும் வழக்கறிஞர், மெஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தை, டெல்லி காவல்துறையினர் சிறப்பு பிரிவு மீண்டும் சோதனையிட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பலருக்காகவும், மெஹ்மூத் பிராச்சா மற்றும் அவரது குழுவினர் ஆஜராகி வாதாடி வரும் சூழலில், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த 100 காவலர்கள், மெஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தில் சோதனையிட்டுள்ளனர்.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பதிவு செய்துள்ள வழக்கை, பிராச்சா குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கும் சூழலில், அவரது அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டிருப்பதாக பிராச்சா தி ஸ்க்ரால் இணைய இதழிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

”இந்த வழக்கில் (டெல்லி கலவர வழக்கு) சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரி தான், என்னுடைய அலுவலகத்தை சோதனையிட்டுள்ளார். எங்கள் அலுவலகத்தை சோதனையிட இரண்டு வாரங்களுக்கே முன்னரே அனுமதி பெற்றும், நாங்கள் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில், இந்த சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது” என்று பிராச்சா கூறியதாக தி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

முன்னதாக, சென்ற ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, பிராச்சாவின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக அப்போது பேசிய பிராச்சா, வடகிழக்கு டெல்லி கலவரத்தில் அமித்ஷாவிற்கு தொடர்பிருப்பதை தான் வெளிக் கொண்டு வருவதால் தான் அமித்ஷாவின் தூண்டுதலில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்