Aran Sei

18 வயதைக் கடந்தவர்கள் ஒன்றாக வாழலாம் – பஞ்சாப் உயர் நீதிமன்றம்

ரு ஆண் திருமண வயதை எட்டவில்லை என்றாலும் 18 வயதை கடந்த தம்பதியர் ஒன்றாக வாழ்வதற்கான உரிமையை மறுக்க முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் தீர்பளித்துள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு தம்பதியினர், பெண்ணின் குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

உ.பி., அரசுக்கு பயந்து டெல்லியில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடி – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

பெண்ணுக்கு 19 வயது, ஆணுக்கு 20 வயது, அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெண்ணின் பெற்றோர் இந்த உறவைப் பற்றி அறிந்தபோது, ​​குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் நடந்தன என்றும் அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பெண், டிசம்பர் 20-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

இருவரும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பெண்ணின் பெற்றோர்கள் மிரட்டியுள்ளனர்.  இது தொடர்பாக அவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

துரத்தும் சாதி ஆதிக்கம் – உயிர் பயத்தில் ஓடும் ஒரு குடும்பம்

இந்த வழக்கை நீதிபதி அல்கா சாரின் விசாரித்துள்ளார். இந்தத் தம்பதி 18 வயதை கடந்தவர்கள் என்பதால் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் அணைத்து உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று நீதிபதி  கூறியுள்ளார்.

“தனி நபர் ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஒரு சமூகம் தீர்மானிக்க முடியாது. அரசியலமைப்பு ஒவ்வொரு நபருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. ஒருவர் தனது துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வாழ்வதற்கான உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகும். தற்போதைய விஷயத்தில், இந்தப் பெண் 18 வயதை கடந்தவர் என்பதால் அவர்,  யாருடன் வாழ வேண்டும் என்பதை அவற்றின் பெற்றோர் தீர்மானிக்க முடியாது. பெற்றோர்கள் ஒரு குழந்தையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழக் கட்டாயப்படுத்த முடியாது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

தம்பதியினர் சமர்ப்பித்த பாதுகாப்பு மனு குறித்து முடிவெடுக்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஃபதேஹ்கர் சாஹிப் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைத் தானே தீர்மானிக்கும் உரிமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்