Aran Sei

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி  குறிப்பிட்டுள்ளார்.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி தமிழக கட்சிகள் மக்களிடையே பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனேவே திமுக மக்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் சென்னையில் உள்ள   ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

இந்தக் கூட்டத்தில் பேசிய கேபி. முனுசாமி ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தை  திராவிட கட்சிகள்தான் ஆள்கிறது. திராவிடத்தின் சொந்தக்காரர் கருணாநிதி மட்டும்தான் யாரும் சொந்தம் கொண்டாட கூடாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும்  கூட்டணி ஆட்சி என்றோ, கூட்டணி அமைச்சரவை என்றோ எங்களிடம் யாரும் வரவேண்டாம் என்றும் தெரிவித்த அவர். தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று திட்டவட்டமாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

நேற்று, செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ”பாஜக, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால், மாநில கட்சிகளோடு அகில இந்தியக் கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது, முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்தியக் கட்சிதான் அறிவிக்கும்” என்று அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்