Aran Sei

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

பாஜக அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”நாளை நடைபெறும் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் 2021 வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. என்று கூறியுள்ளார்.

’இருக்கு.. ஆனா இல்ல’- அதிமுக-பாஜக கூட்டணி

மேலும், “கடந்த 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பாஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றதிலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. 1980-ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறிவருவது குறித்து கேட்டதற்கு, “பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால், மாநில கட்சிகளோடு அகில இந்தியக் கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது, முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்தியக் கட்சி அறிவிக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

“நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பெண்கள்தான் தீர்மானிப்பார்கள் – கனிமொழி

அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் துவக்க விழா நாளை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்;-அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் இது கூட்டணியினருக்கும் பொருந்தும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே அதிமுக தலைமையில்தான் அமைந்தது. எனவே சட்டமன்ற தேர்தல் கூட்டணித் தலைமையும் அதிமுகதான் ஏற்கும் என்றும் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்