Aran Sei

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியில் இருந்து நீக்கம் – ஒபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டறிக்கை

திமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளருமான மருத்துவர் நிலோபர் கபீல் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்  செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறிக் கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் நிலோபர் கபீல், (கழக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட கழக துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு

மேலும், “கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்”என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்