அண்ணா பல்கலைக்கழகதில் தமிழக அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று கூறி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடித்தை உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுக்கச்சென்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் தன்னுடைய ட்விட்டர் பக்கதில் பதிந்துள்ளார் அதில், ”அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறையின் பட்டமேற்படிப்புக்கு தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மறுத்துள்ளார் துணைவேந்தர் சூரப்பா. தற்போது அட்மிஷனே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படிப்பை மட்டுமே நம்பியிருந்த 45 மாணவர்களின் இந்த கல்வியாண்டு கேள்விக்குறியாகியுள்ளது. இதில் அரசு உடனே தலையிட்டு தீர்வுகாண விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் சார்பாக உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி அபூர்வா IAS அவர்களிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கடித்ததில், “இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள இடையூறுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் 2020-21 கல்வியாண்டிற்கான எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியுடனல் பயாலஜி (Computational Biology) படிப்புகளுக்கு சேர்க்கை கைவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். பயோடெக்னாலஜிக்கு ஒரு தனித் துறையைத் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிற்கு முன்னோடியாக உள்ளது. மேற்கண்ட படிப்புகள் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அன்றிலிருந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை
இப்பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி, கம்பியுடனல் பையாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முதுகலைப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியுடனல் பையாலஜி உள்ளிட்ட படிப்புகளைப் படிக்க மத்திய அரசு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வான GAT-B யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், முதுகலைப் படிப்பதற்கு மாதம் கல்வி உதவித்தொகையும் (fellowship) அளிக்கப்படுகிறது என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி
மேலும், எம்.டெக் பயோ டெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டரேஷ்னல் பயோ டெக்னாலஜி பாடத்தில் சேர 45 மாணவர்கள் நுழைவு தேர்வில் வெற்றிபெற்று கலந்துரையாடலுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆனால் 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கையை நடத்த மறுப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எனவே, 2020- 21 ஆம் ஆண்டிற்கான எம் டெக் படிப்புகளுக்கான சேர்க்கையை GAT-B அல்லது TANCET மூலம் நடத்த வேண்டும். மேலும் தமிழகத்திற்கே உரிய இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.