Aran Sei

பல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்?

ட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல், தீவைப் பார்வையிட கடந்த பிப்ரவரி 21 ஆம் நாள் மேற்கொண்ட பயணத்திற்கு, விமான வாடகையாக ₹23,21,280  ரூபாயை, அத்தீவு நிர்வாகம் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை

மேலும், பிரபுல் கோடா படேலின் ஒவ்வொரு பயணத்திற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத் தீவில் பிரபுல் படேல் பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய உத்தரவுகளுக்கு எதிராக கடந்த ஜூன் 14 அன்று நடந்த போராட்டத்தை ஒட்டி, லட்சத்தீவின் அகாத்தி பகுதிக்கு பயணித்த பிரபுல் படேல், கடற்படையின் டார்னியர் தனி விமானத்தில் பயணித்தாகவும் தி இந்து செய்தியில் தெரிவித்துள்ளது.

‘லட்சத்தீவு மக்களின் உணவு, மத நம்பிக்கைகளை குறிவைக்கும் சட்டத்திருத்தங்கள் கவலையளிக்கிறது’ – முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

இதே போன்று, கடந்த பிப்ரவரி 21 அன்று டாமனிலிருந்து பிரபுல் படேல் திரும்புவதற்கு டார்னியர் தனி விமானத்திற்கு வாடகையாக ₹23,21,280 லட்சத்தை தீவு நிர்வாகம் அளித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் அளித்துள்ள விலைவிவரப்பட்டியலின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்