Aran Sei

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

Image Credits: DNA India

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு முயற்சித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், முசாபர்நகரில் நடைபெற்ற வன்முறையில், இரண்டு இந்துக்கள் சேர்ந்து இஸ்லாமியர் என்கிற காரணத்திற்காகவே ஒருவரை கொன்றனர். பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை செய்த இந்துவை ஒரு இஸ்லாமிய குழு கொன்றது. இந்த வன்முறைக்கு தீர்வு காணும் விதமாக ஜாட் சமூகத்தினர் ஏற்பாடு செய்த ‘மகாபஞ்சாயத்து’ யில் பேசிய மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) பெரும் கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டது .

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

அதைத் தொடர்ந்து, நடந்த வன்முறையில், 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 40,000 க்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழந்தனர். அப்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.

ஆதித்யநாத் அரசு திரும்பப் பெற முற்படும் இந்த வழக்கு ஷிகேதா காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சர்தானா எம்எல்ஏ சங்கீத் சோம், தானா பவன் எம்எல்ஏ சுரேஷ் ராணா மற்றும் முசாபர்நகர் சதர் எம்எல்ஏ கபில் தேவ் மீது இந்த வழக்கு பதிவாகியுள்ளது. இந்துத்துவா தலைவரான சாத்வி பிராச்சியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் 36 பேர் இதில் குற்றம் சட்டப்பட்டனர்.

சீனா: கட்டாய உழைப்பில் 5 லட்சம் உய்குர் இஸ்லாமியர்கள்

உரையைத் தண்டி இவர்கள் மீது “தடை உத்தரவுகளை மீறுதல், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் ஒரு மகாபஞ்சாயத்தை நடத்துதல், அரசு ஊழியர்களை தங்கள் கடமையைச் செய்வதைத் தடுக்க தடைகளை உருவாக்குதல், மற்றும் வாகனத்துக்குத் தீ வைத்தல்” போன்ற குற்ற சாட்டுகளும் வைக்கப்பட்டன என்று  இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசுச் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்

2013-ம் ஆண்டு, கலவரத்தைத் தொடர்ந்து 6,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அதில் 1,480 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு 175 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாஜக தலைவர்கள் மீது மாநில காவல்துறை பதிவு செய்த வழக்குகளை நீக்க முயற்சித்து வருகிறார் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

1000 கோடி மதிப்பீட்டில் இந்து கோயில் : இஸ்லாமாபாத்தில் கட்ட அனுமதித்த பாகிஸ்தான் அரசு

2018-ம் ஆண்டில், முசாபர்நகர் மாவட்ட அதிகாரிகள், உத்தரபிரதேச நீதித்துறையின் இரண்டு கடிதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இது போன்ற வழக்குகளை வாபஸ் பெறுவதை எதிர்த்து வாதிட்டுள்ளனர். காவல்துறை மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதால் இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். உத்தரபிரதேச நீதித்துறையின் கடிதத்தில் பொது நலன் கருதி வழக்கு திருப்பிப் பெறப்படும் என்று கோரப்பட்டது.

“இந்தப் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகள் மிக மெதுவாக விசாரிக்கப்படுவதாக” 2018-ம் ஆண்டில், தி வயர் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. தற்போது, குற்றசாட்டுகள் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கான முக்கிய கட்டத்தில் இந்த வழக்கு உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்