Aran Sei

காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது ரத யாத்திரை சென்ற அத்வானி; யாத்திரையை ஒருங்கிணைத்த மோடி – ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விமர்சனம்

காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற தொடங்கியபோது, அத்வானி ரத யாத்திரை தொடங்கி இருந்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடிஜி அந்த யாத்திரைக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 21), மக்களவையில் பூஜ்ய நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து விவாதம் எழுந்தபோது பேசியுள்ள ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “ஜம்மு காஷ்மீரின் அப்போதைய ஆளுநர் ஜக்மோகன் காஷ்மீர் பண்டிட்டுகளையும் சீக்கியர்களையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்ட பின்தான், காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேறத் தொடங்கினர். உங்களை பாதுகாக்க முடியாது என மக்களிடம் ஜக்மோகன் சொன்னார்” என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – காங்கிரஸ் எதிர்ப்பு

“பயங்கரவாதிகளும் ஜிஹாதிகளும் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்கள்மீது அட்டூழியங்களைச் செய்யத் தொடங்கினர். அப்போது, பாஜக ஆதரவுடன் வி.பி.சிங் ஆட்சியில் இருந்தார். ​​காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராஜீவ் காந்தி, காஷ்மீரில் இருந்து மக்கள் வெளியேறப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தார். அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியதோடு, நாட்டு மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

“அந்த நேரத்தில், லால் கிருஷ்ண அத்வானி (எல்.கே.அத்வானி) ரத யாத்திரையை தொடங்கி இருந்தார். நமது (தற்போதைய) பிரதமர் நரேந்திர மோடி ஜி அந்த யாத்திரைக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார்” என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்