இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்குமக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் ஒரு மில்லியன் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் என்று ஒரு சர்வதேச பத்திரிகை கணித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடனும் இரண்டு நாள் சிறப்பு அமர்வை உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “இந்த கொரோனா பெருந்தொற்று சூழலில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு உங்கள் மனசாட்சியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், இந்தியா பல நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தங்களுடைய தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், தன் தொகுதி மக்களின் நிலை குறித்தும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவர்களை காப்பாற்ற வழி செய்யவேண்டியும் சொல்வதற்கு நிறைய உண்டு.” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.