Aran Sei

‘வங்கியில் மோசடி செய்த பெரும்பணக்காரர்களின் சொத்துக்களை முடக்க சட்டம் தேவை’ – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

ங்கிகளைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பலர் கரீபியன் கடற்கரைகளில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடைசெய்யும் மசோதா குறித்து நேற்று (ஏப்ரல் 6) மக்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்கினாலோ அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, அந்நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்க, பறிமுதல் செய்ய அல்லது தன்னோடு இணைத்துக்கொள்ள ஒன்றிய அரசுக்கு இம்மசோதா அதிகாரம் வழங்குகிறது.

Bad Boy Billionaires – ஹீரோக்களின் பின்னணி : ஷியாம் சுந்தர்

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை) திருத்த மசோதா-2022 என்ற அம்மசோதாவானது விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவாதத்தின் போது பேசியுள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நான் ஒன்றிய அரசாங்கத்திடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இங்குள்ள வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு பலர் நாட்டை விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு எதிராக நாம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கரீபியன் கடற்கரையில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் இங்கிருந்து அவர்களை பேஸ்புக் வழியாகவும் வாட்ஸ்அப் வழியாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வாராக் கடன் பிரச்சனை: தீர்க்குமா திவால் சட்டத்திருத்தம்?

“நம் நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கும் இதுபோன்ற நபர்களுக்கு எதிராக நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் தேவை” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Source: PTI

ராமராஜனா? ராமராஜ்ஜியமா?

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்