Aran Sei

‘தடுப்பூசி கேட்டு இந்திய அதிகார வர்க்கம் மிரட்டுவதாகப் புகார்’ – அழுத்தத்தின் காரணமாக லண்டன் சென்ற அதார் பூனாவாலா

கோவிட்ஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அதார் பூனாவாலாவிற்கு இந்தியாவின் அதிகாரம் மிக்க நபரிடமிருந்து கோவிட்ஷீல்டு தடுப்பூசி கேட்டு மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீரம் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களைச் சந்திக்க லண்டன் சென்றிருந்த அவர், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்பியதும் புனேவில் நடைபெற்று வரும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி பணிகளை பார்வையிடஉள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாநில அரசுகளுக்கான கோவீட்ஷீல்ட் தடுப்பூசி விலையில் 100 ரூபாய் குறைத்த சீரம் – எழுந்த கண்டனங்கள்தான் காரணமா?

மேலும், கடந்த வாரத்திற்கு முன்பு மத்திய அரசு ஒய்(Y) பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளதாகவும், இந்தியாவின் அதிகாரம் மிக்க நபரிடமிருந்து கோவிட்ஷீல்டு தடுப்பூசி கேட்டுக் கோபமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அதார் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்ஷீல்டு தடுப்பூசி காரணமாக எழுந்த அழுத்தத்தின் காரணமாகவே, லண்டன் சென்றதாக அதார் பூனாவாலா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

அதார் பூனாவாலாவிற்கு வழங்கப்பட்ட ஒய்(Y) பிரிவு பாதுகாப்பு குறித்து மத்திய அரசு, அவருக்கு அச்சுறுத்தல் நிலவுவதின் காரணமாக வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது. மேலும் இந்தியாவிற்குள் அவர் பயணிக்கும்போது பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்