Aran Sei

‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை மாதம்வரை நீடிக்கும் – அதார் பூனாவாலா அறிவிப்பு

சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் ‘கோவிட்ஷீல்டு’ கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை வரும் ஜூலை மாதம்வரை நீடிக்கும் என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்,” தற்போது ஒரு மாதத்திற்கு 60 – 70 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் ஜூலை மாதம் முதல் 100 மில்லியனாக உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

‘தடுப்பூசி கேட்டு இந்திய அதிகார வர்க்கம் மிரட்டுவதாகப் புகார்’ – அழுத்தத்தின் காரணமாக லண்டன் சென்ற அதார் பூனாவாலா

இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடானது கடந்த மே 1 லிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்ததிலிருந்து பற்றாக்குறை  நிலவுவதாகவும் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ள அதார் பூனாவாலா, “எல்லோரும் தன் மீது தவறாகவும் ஆதாரமற்றும் குற்றம் சுமத்துகிறார்கள். இதற்கு முன் நாங்கள் இவ்வளவு தடுப்பூசி உற்பத்தி செய்ததில்லை. 1 பில்லியன் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிலை வரும் என்று நாங்கள் சிந்திக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

சில நாட்களுக்கு முன்னர் அதார் பூனாவாலாவிற்கு இந்தியாவின் அதிகாரம் மிக்க நபரிடமிருந்து கோவிட்ஷீல்டு தடுப்பூசி கேட்டு மிரட்டல் வருவதாகவும், கோவிட்ஷீல்டு தடுப்பூசி காரணமாக எழுந்த அழுத்தத்தின் காரணமாக அவர் லண்டன் சென்றதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்