Aran Sei

அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்

தானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிக கடுமையானவை. பிரதமரின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல். இதுபற்றி நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளை அடிக்கிறது – அதானி குழும விளக்கத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரது பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்ப உள்ளேன் என்று சஞ்சய்சிங் அதில் தெரிவித்துள்ளார்.

Source : india today

இந்தியாவையே கொள்ளையடிக்குறாங்க | அதானியை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் | Aransei Roast | Adani

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்