Aran Sei

தனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு

த்தியப்பிரதேச மாநிலத்தில் 12௦௦ கோடி மதிப்புள்ள மின்தொடர்புத் திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம்  850 கிலோமீட்டர் மின் சுற்றளவையும் அம்மாநிலத்தின் 18 மாவட்டங்களில் 220kV மற்றும்  132kV மின்திறன் கொண்ட துணை மின்நிலையங்களையும் உள்ளடக்கியதாகும்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அதானி நிறுவனம், கட்டண அடிப்படையிலான போட்டியை ஏலம் வழியாக வென்றுள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் கடிதம் கடந்த செப்டம்பர் 14 அன்று பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கட்டுமானம், உரிமை, செயல்பாடு, பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ள அதானி நிறுவனத்திற்கு  35 ஆண்டுகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் வழியாக 2022க்குள் 20,000 கிலோமீட்டர்  மின் சுற்றை அமைப்பது என்ற இலக்கை நோக்கி மேலும் ஒருபடி நகர்ந்துள்ளதாகவும்  அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: Psu watch

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்