Aran Sei

எஸ்ஸார் நிறுவனத்திற்கு 3,600 கோடி கடன் தள்ளுபடி – அதானி நிறுவனத்திற்கு 3,000 கோடிக்கு விற்பனை?

credits : ndlf

மத்திய பிரதேச மாநிலம் மஹான் என்ற இடத்தில் அமைந்துள்ள எஸ்ஸார் நிறுவனத்திற்கு சொந்தமான 1,200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை வாங்குவதற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்ஸார் பவர் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியில் 1,600 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இதேபோல் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷல் வங்கி, பொதுத்துறை நிதி நிறுவனங்களான மின்சார நிதி நிறுவனம் (Power Finance Corporation), கிராமப்புர மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation) மற்றம் ஐடிஎஃப்சி வங்கிக்கு சுமார் 5,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது.

கடனுக்கான வட்டியுடன் எஸ்ஸார் பவர் நிறுவனம் மேற்கண்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுமார் 12,000 கோடி ரூபாய் திரும்ப செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

எஸ்ஸார் நிறுவனம், கடனையும் வட்டியையும் செலுத்தாத நிலையில், ஐசிஐசிஐ வங்கி தலைமையில் வங்கிகளின் கூட்டமைப்பு திவால் சட்டத்தின் அடிப்படையில் (Insolvency Bankruptcy Code) தேசிய கம்பெனிகள் சட்ட தீர்பபாயத்தை அணுகின.

இந்நிலையில், அதானி நிறுவனம் எஸ்ஸார் பவர் நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், அதானி நிறுவனம் முன்மொந்த விலையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 6,600 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய எஸ்ஸார் பவர் நிறுவனத்தை, சுமார் 3,000 கோடிக்கு அதானி நிறுவனம் வாங்க உள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

எஸ்ஸார் பவர் நிறுவனம் வங்கிகளுக்கு வழங்க வேண்டிய வட்டியை தவிர்த்துவிட்டு பார்க்கும்போது, சுமார் 3,600 கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்