Aran Sei

கொரோனா காலத்தில் உலக பணக்காரர்களை முந்திய அதானி – ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல்

டந்த ஆண்டில் உலகின் அதிக சொத்து சேர்ந்தவர்கள் பட்டியலில், அதானி முதலிடம் பிடித்திருப்பதாக, ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் பெரும்பணக்காரர்கள் குறியீட்டின்படி, முதல் தலைமுறை தொழிலதிபரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, 2021 ஆம் ஆண்டில் 1,620 கோடி அமெரிக்க டாலரிலிருந்து  5,000 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் உலகின் முதல் பணக்காரரான ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த எலான் மஸ்கை விட, கௌதம் அதானி கடந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியிருப்பதாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – நடவடிக்கை எடுக்காதது ஏனென்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி

அதானி குழுமத்தின் பங்குகளின் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும், குறைந்தபட்சம் 50 விழுக்காடு லாபம் அடைந்திருப்பதாக, ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், தரவு மையங்கள், நிலக்கரி சுரங்கங்கள் என இந்தியாவிலும், சர்ச்சைக்குரிய கார்மைக்கேல் நிறுவனத்துடன் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி திட்டம் என, அதானி தனது குழும் வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், 532 விழுக்காடு வளர்ச்சியடைந்த அதானி மின்சார உற்பத்தி நிறுவனம், அதானியின் சொத்துக்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

ஹுவுவாய் தொலைபேசிகளுக்கு தடை – இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவிப்பு

“சந்தை சுழற்சிக்கு நெகிழ்வான பகுதிகளில், அதானி குழுமம் தொடர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகிறது”, என கூறியுள்ள நைகா ஆலோசனை சேவை நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான சுனில் சண்டிரமணி, “தரவு மையங்களின் வணிகத்தில் நுழைவதன் மூலம், தொழில்நுட்ப துறையில் உள்ள ஆர்வத்தை அதானி குழுமம் சுட்டிக்காட்டியுள்ளது.” என தெரிவித்துள்ளாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், அதானியின் எரிவாயு நிறுவனம் 97 விழுக்காடும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 87 விழுக்காடும், துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 50 விழுக்காடும், புதுப்பிக்கதக்க மின்சார உற்பத்தி நிறுவனம் 10 விழுக்காடும் வளர்ச்சியடைந்திருப்பதாக, ப்ளூம்பெர்க் செய்தியில்;a வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்